top of page

                                               மகா யாக அக்னி அறக்கட்டளை

மகா யாக அக்னி அறக்கட்டளையானது உலக மக்களின் வாழ்க்கைத் தர உயர்வுக்காக நமது ரிஷிகள்,  ஞானிகள் மற்றும் அருளாளர்களின் வழிகாட்டுதலின் படி அனைத்து உயிர்களின் மேம்பாட்டிற்காக இந்த அறக்கட்டளை அமைக்கப்பட்டது. முன்னோர்களால் போற்றி வணங்கப்பட்ட மற்றும் பாதுகாக்கப்பட்ட இயற்கை சக்திகளை வழிபட்டு அதன் மூலம் பஞ்ச பூத சக்திகளையும் பிரபஞ்ச ஆற்றலையும் உள்வாங்கி வாழும் உயிர்களுக்கும் அதன் எதிர்கால சந்ததிகளுக்கும் கிடைக்கப்பெற செய்வதற்காகவே 2023 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் தேதி துவங்கப்பட்டது.

முக்கியத்துவம்:

மனித சமூகம் தன்னிலை தவத்தை உணர்ந்தும், பிரபஞ்ச பஞ்சபூத சக்திகளான நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் ஆகியவற்றை சரியான முறையில் கிடைக்கப்பெறச் செய்தும், பிரபஞ்ச ஆற்றலை பெற்று தன்னையும் மற்ற உயிர்களையும் பசி, பிணி, வறுமை போன்ற பாதிப்புகளில் இருந்து பாதுகாத்து, இயற்கையாகவே உயிர்களின் அடிப்படை வளர்ச்சி நிலையை வாழும் முறைக்கு ஏற்ப பகிர்ந்து அளிப்பதாகும்.

பயன்கள்:

மனஅமைதி, கல்வி வளர்ச்சி, அறிவு மேம்பாடு, மன நலம், உடல் நலம், ஒருங்கிணைந்த செயல்திறன், பல்லுயிர் பெருக்கம், இயற்கை வளங்களையும் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பது மற்றும் அதன் பெருக்கம்.

செயல்பாடுகள்:

உலக நல யாகங்கள், வேத பாட சாலை அமைப்பு, அருளுரை, தியானம் யோக பயிற்சி, மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் மற்றும் பயிற்சி, வாழ்வியல் கருத்தரங்கம், அன்னதானம்,    இயற்கை விவசாய பயிற்சி, கோசாலை, கோ பூஜை, பசு பராமரிப்பு , கோசாலை பொருட்களின் மதிப்புக்கூட்டல் பயிற்சி மற்றும் சூழ்நிலையின் தேவைக்கேற்ப பயிற்சி மற்றும் உதவி.

முகவரி:

5/185, கே.வி.கே நகர்

கோபனூர்புதுர்

கப்பளாங்கரை

கிணத்துக்கடவு

கோயம்புத்தூர்

642120

தமிழ்நாடு

இந்தியா

 அறக்கட்டளையின் ஆன்மீகப் பணிகளுக்காகத் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கெண்ட நமது அருள்குரு, "பக்தஸ்ரீ இராஜேஸ்வரி அம்மா”, அவர்கள் கேரள மாநிலம் நெம்மாராவில் கி.பி. 1958-ம் ஆண்டு பிறந்தவர். அம்மா அவர்கள் தமது வாழ்வில் இல்லறத்தை ஏற்காமல், துறவறம் பூண்டு இறைவன் மீது பக்தி செய்வதையே தமது வாழ்வின் லட்சியமாகக் கொண்டவர். அம்மா அவர்கள் சிறுவயது முதலே தனது அனன்ய பக்தியால் இறைவனை இடையறாது பூஜித்து பல அற்புத திவ்ய தரிசனங்களைக் கண்டு ஓம் ஸ்ரீ ஆதிபராசக்தி அம்பிகையின் பேரருளை வரமாகப் பெற்றவர்.

 

அம்பிகையின் பேரரருள் சக்தியைத் துணையாகக் கொண்டு 'பக்தஸ்ரீ இராஜேஸ்வரி அம்மா அவர்கள், தன்னிடம் பக்தியோடு தேடி வரும் மக்கள் எல்லாவரையும், சாதி, மத, இன வேறுபாடுகளின்றி பேரன்புடன் வரவேற்று நமது வாழ்க்கையில் அனுபவித்து வருகின்ற இடையூறுகளையும்,முன்னேற்றங்களையும் தமது ஞான சக்தியால் உணர்ந்து உரைத்து நமக்கு நல்வழிகாட்டி அருள் செய்கிறார்கள்.

 

பக்தப் பெருமக்களாகிய தங்களின் வாழ்வியல் துன்பங்களைப் போக்கிக் கொள்ளவும், தமது லட்சியங்களையும், முன்னேற்றங்களையும் தடையின்றிப் பெறவும், பல காலமாக பிரச்சனைகளிலும், வறுமையிலும், நெருக்கடிகளிலும் நஷ்ட கஷ்டங்களிலுமே வாழ்ந்து நம்பிக்கையற்று, சோர்ந்து விட்ட எனதருமை சகோதர, சகோதரிகளே!.... வாருங்கள்!....

 

அன்புத்தாய் ஓம் ஆதிபராசக்தி அம்பிகை ஆலயத்தில் நமக்கு அபயம் தந்து ஆதரவளித்து பகையையும், பல்பிணியையும் போக்கி, அவளது அருள்பார்வையால் நமது இன்னல்களை  களைந்து, உள்ளங்களில் ஆனந்தத்தை நிரப்பி மகிழ்ச்சி தரக் கருணையோடு வீற்றிருக்கிறார்...வாருங்கள்!..

 

நமது அருள்குரு பக்த ஸ்ரீ இராஜேஸ்வரி அம்மா அவர்களின் உள்ளார்ந்த அன்பையும், அருள்சார்ந்த வழிகாட்டுதலையும் பெற்றுயர வாருங்கள்!..

பக்தஸ்ரீ இராஜேஸ்வரி அம்மா அவர்களின் அருள்வாக்குரை  நிகழ்ச்சியில் கலந்து நல்ல பல பலன்களைப் பெறலாம். அவைகள் உதாரணமாக கல்வித்தடை, படித்தபின் மறதி, பள்ளி செல்ல விருப்பமின்மை, உடல் நலமின்மை, தொழில் நஷ்டம், தொழில் தடை, வேலைக்குச் செல்ல விருப்பமின்மை, திருமணத்தடை, குடும்பச்சிக்கல், மன நிம்மதியின்மை, இடம், வீடு, தொழில் ஸ்தாபனம் குறைபாடு, இடம், வீடு, பூமி விற்கத்தடை, கணவன் மனைவி கருத்து வேறுபாடு, குழந்தையின்மை,

 

பெற்றோர் சொல் கேளாத பிள்ளைகளால் அவதிப்படுவோர், கெட்ட பழக்கம், பயம், தூக்கமின்மை, மனக்குழப்பம், நவகிரகதோஷம், பித்ரு தோஷம், சத்ரு தோஷம், மாந்திரிக தோஷம், காற்று தோஷம், செய்வினை மற்றும் பார்வை தோஷம் போன்றவற்றால் அவதிப்படுவோர், சொத்துத் தகராறு, கடன்தொல்லை, தேர்வில் தோல்வி,

மற்றும் தங்களின் அனைத்துவித சந்தேகங்களுக்கும் கேள்வி-பதில் முறையில் மிகச் சரியான ஆலோசனைகள் வழங்கி தங்களின் வாழ்வை ஒளிமயமாகவும், ஒற்றுமையாகவும் நடத்திச் செல்ல நமது முன்னோர்களால் வழிகாட்டப்பட்ட அருள்நெறியாம், பக்தி வழிமுறையை நாமும் கடைபிடித்து நலபல பெற

மகா யாக அக்னி அறக்கட்டளை வழிகாட்டும் என்பதை உண்மையாகவும் உறுதியாகவும் கூறி தங்கள் அனைவரையும் இத்திருப்பணியில் இணைந்து இன்பம் பெற உளம் நிறைந்த

 

அன்புடன் அழைக்கும்...

மகா யாக அக்னி அறக்கட்டளை 

அன்னை ஆதி பராசக்தி திருக்கோவில் 
நெகமம் ,பொள்ளாச்சி 

At Maha Yaga Agni Trust, we are dedicated to the spiritual upliftment of our community and to the welfare of all people. Our mission is to create a better world by taking the blessings of God Aadhi Parasakthi and using them to bring healing and peace.

We believe that by coming together and providing spiritual guidance and support, we can bring about positive change in our society. We strive to create an inclusive and safe environment for everyone, no matter their background or beliefs. Join us today and be part of a movement of hope and empowerment.

We believe all women can embrace who they are,
can define their future, and can change the world.

Our Mission

Our Mission

At Maha Yaga Agni Trust, we are dedicated to the spiritual upliftment of our community and to the welfare of all people. Our mission is to create a better world by taking the blessings of God Aadhi Parasakthi and using them to bring healing and peace.

 

We believe that by coming together and providing spiritual guidance and support, we can bring about positive change in our society. We strive to create an inclusive and safe environment for everyone, no matter their background or beliefs. Join us today and be part of a movement of hope and

annai (1).jpg

Our Vision

I'm a paragraph. Click here to add your own text and edit me. I’m a great place for you to tell a story and let your users know a little more about you.

We Need Your Support Today!

bottom of page